அஜித் 6 பேக் கிராபிக்ஸா? இயக்குனர் சிவா சொன்ன பதில் இதுதான்

அஜித் 6 பேக் கிராபிக்ஸா? இயக்குனர் சிவா சொன்ன பதில் இதுதான்விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் 6 பேக் வைத்திருந்தார். அது அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், அவரை பிடிக்காதவர்கள் அது கிராபிக்ஸ் என குற்றம்சாட்டி வந்தனர்.

அதனால் வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் சண்டை வாக்குவாதம் நடந்தது.

இந்நிலையில் விவேகம் படத்தின் இயக்குனர் சிவா சமீபத்திய பேட்டி ஒன்றில் இது பற்றி பேசியுள்ளார்.

“கிராபிக்ஸ் என்று சொல்வதை பற்றி நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை. வேலையை விட்டுவிட்டு அவர்களுக்கு பதில் அளித்து கொண்டிருந்தால் நம் வேலை தான் கெடும். எங்களால் முடிந்த வரை வேலைகளை சிறப்பாக செய்கிறோம். உழைப்புக்கு ஏற்ற மரியாதையும், அங்கீகாரமும் எங்களுக்கு விரைவில் நிச்சயம் கிடைக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply