அதிகரித்து வரும் கொலைகள்

தென்சூடானில் தொன்டு நிறுவன பணியாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் சுமார் 82 தொண்டு நிறுவன பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 15 தொண்டு நிறுவன பணியாளர்கள் தென்சூடானில் இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்துள்ளார்கள்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தென்சூடானைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, தொண்டுப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள மேற்கொள்ளுமாறு தென்சூடான் அரசாங்கத்திற்கு ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், தென் சூடானில் இடம்பெற்றுவரும் மோதல்களினால் பல மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், போதுமான உணவுகள் இன்றி பட்டியினியால் வாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply