அனலை எக்ஸ்பிரஸ் நிறுவனத்தினரின் 3வது சமூக நலத்திட்டம்…!

கனடாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் மேற்படி இணைய ஊடக நிறுவனம் பல்வேறு சமூக, கலாச்சார பணிகளை தாயகப்பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் கிளிநொச்சி பகுதியில், பெற்றோரை இழந்தும், வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்து வரும் பாடசாலை செல்லும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாணவருக்கும் சுமார் 600.00 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அண்மையில் கிளி/முழங்காவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் மேற்படி கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மேற்படி வித்தியாலய அதிபர் திருமதி சி.பரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர். அதிபர் தனது உரையில், மேற்படி சமூக இணைய ஊடக நிறுவனம் எமது பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை மையமாகக் கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை வெகு சிறப்பாக செய்து வருகின்றது.

குறிப்பாக புன்னாலைக்கட்டுவான் சித்திவிநாயகர் மகா வித்தியாலயம், எமது பாடசாலை, தீவகத்தின் சில பாடசாலைகள் என உண்மையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை உட்பட சகல கற்றல் உபகரணங்களையும் வழங்கியுள்ளனர். அவர்களின் இச் சேவை தொடர எங்கள் பாடசாலைச் சமூகத்தின் சார்பாக உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். மேலும் எமது பாடசாலை பிரார்த்தனை கூடம், பாடசாலை வகுப்பறை கட்டிடம், ஆசிரியர் விடுதி என்பன மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதி பெற்றோரின் சரீர உதவியுடன் தற்காலிகமாக கூரை வேயப்பட்டு, இயங்கி வருகின்றது. இப்பகுதி பெற்றோரின் சரீர உதவி பெரிதளவில் கிடைக்கின்ற போதும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ளதாகவும், அதனாலேயே பாடசாலை கட்டிடம், ஆசிரியார் விடுதி போன்றன முழுமையாக புனரமைக்க முடியாமல் உள்ளதாகவும், குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து கற்பிக்கும் ஆசிரியர்கள் தமது பணிகளை சிறப்பாக செய்கின்ற போதும் முழுமையாக தமது பணிகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளதாகவும் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ae1

ae2

ae3

ae4

ae5

ae6

ae7

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply