அனலை எக்ஸ்பிறசின் 2வது சமூக நலத்திட்டம்

கவிஞர் நெடுந்தீவு முகிலனின் மற்றுமொரு படைப்பான ‘பாற்காரன்” குறுந்திரைப்படம் யாழ் ராஜா திரையரங்கில் திரையிட்டு வெளியிடப்பட்டது. இதற்கான ஊடக அனுசரனையாளராக அனலை எக்ஸ்பிறஸ் மீடியா நிறுவனம் (கனடா) பங்களிப்பு நல்கியிருந்தது. அகிய இலங்கை கலை இலக்கிய சங்க தலைவர் பொன்.சுகந்தனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்துறை தலைவர்  திரு.எஸ்.சிவலிங்கராஜாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அத்துடன் சிறப்பு விருந்தினராக மகளிர் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் திருமதி சரோஜினி சிவச்சந்திரனும் கௌரவ விருந்தினராக ஹரிஹணன் பிறிண்டஸ் உரிமையாளர் திரு.சி.ராஜ்குமார் மற்றும் அனலை எக்ஸ்பிறஸ் நிர்வாக உத்தியோகத்தர் திரு கே. பிரபாகரன் அவர்களும் கனடாவிலிருந்து வருகை தந்திருந்த சமயத்தில் கலந்து சிறப்பித்துக் கொண்டார். வெளியீட்டு உரையை கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை விரிவுரையாளர் செந்தமிழ் சொல்லருவி திரு.எஸ்.லலீசன் அவர்கள் நிகழ்த்தினார்.
முதற் பிரதியை வர்தகர் ஈ.எஸ்.பி நாகரத்தினம் பெற்றுக்கொள்ள சிறப்பு பிரதியை முகாமைத்துவ பணிப்பாளர் மா.சுகந்தன் பெற்றுக்கொண்டார். நம் சமூகத்தில் பாலின் உன்னததன்மையையும் முக்கியத்துவத்தையும்  மையமாக கொண்ட இக்குறும்படமானது மிகவும் சிறப்பான முறையில் சமூகத்திற்கு முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டுகின்றது.
இக் குறும்படத்தின் வெளீயீட்டை முதன் முதலாக யாழ் மண்ணில் இருந்து எமது அனலை எக்ஸ்பிறஸ் இணையதளம் நேரலையாக ஒளிபரப்பு செய்தோடு ரூபா 15,000/= வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Mil-2
Mu-1

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply