அனலை எக்ஸ்பிறஸ் மீடியா நிறுவனத்தின் 6வது சமூக செயற்றிட்டம்

தாயக உறவுகளின் வாழ்வின் ஒளிமயமானதோர் நீண்ட குறிக்கோளினை மையமாக வைத்து தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளின் முயற்சியினால் உருவாக்கப்பட்டதே இந்த அனலை எக்ஸ்பிறஸ் மீடியா நிறுவனமாகும்.

அந்நிறுவனத்தின் சமூக நிதித்திட்டத்தின் கீழ் தீவகத்தில் மிகவும் அதிகஷ்ர பிரதேசமாக விளங்கும் யா/எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அப்பாடசாலையினது வேண்டுகோளுக்கிணங்க பல்லூடக தெறிப்பான் (Multi Media Projector) இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இப்பல்லூடக தெறிப்பானை அனலை FM இணையவானொலி யாழ் அலுவலகத்தில் யாழ் முகாமையாளர் திரு க. உதயகுமாரன் மற்றும் ஊடக இணைப்பாளரும் கலையக பிரதம அறிப்பாளர் இசைச்செல்வனும் பாடசாலை ஆசிரியர் திரு அகிலன் நற்குணம் அவர்களிடம் வழங்கிய நிலையில் பாடசாலை சமூகத்தின் சார்பில் அனலை எக்ஸ்பிரஸ் மீடியா நிறுவனத்தாருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளப்பட்டதாக அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

M-1

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply