அமிர்தலிங்கம் கொலையும், அதன் உண்மையான பின்னனியும்!

11248797_468631299962419_2951484167020833986_nஜூலை 13, 1989 அன்று அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் கொழும்பில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்டதன் பின்னனியை நீங்கள் பின்வருமாறு காணலாம். இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு முரணான வகையில் இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப்படைகளை அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாச அவர்கள் இலங்கை மண்ணில் இருந்து வெளியேற்ற புலிகளுடன் சேர்ந்து எடுத்த நடவடிக்கை ராஜீவ் காந்தி அரசை சீற்றம் கொள்ள வைத்தது.

அதன் விளைவு, சைப்பிரஸ் நாட்டின் உருவாக்கத்தை ஒத்த நடமுறையினூடு இலங்கையில் தமிழருக்கு ஒரு தனி நாட்டிற்கு சமமான அரசியல் அதிகார அலகை திரு அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் உருவாக்க எண்ணி அதற்கான முயற்சியில் இந்தியா இறங்கியது.

இவ்விடயம் தொடர்பாக அப்போதைய இந்தியத் தூதுவர் திரு.ஜே.என்.டிக்சிட் அவர்கள் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“It Would Lead To A Cyprus-Like Division”

மேலும், இவ்விடயம், திரு கருணாநிதி ஊடாக புலிகளின் தலைமைக்கு அறிவிக்கப்பட்டதுடன் பிரேமதாச அரசுடனான உறவை துண்டித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. பின்னாளில் இது தொடர்பாக திரு மாவை சேனாதிராஜா அவர்களும் ஒரு இடத்தில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தோடு சைபிரஸ்ட் நாட்டின் சிறு வரலாற்று சுருக்கத்தையும் உங்களுக்கு தருகிறேன், இது நான் மேற்குறிப்பிட்ட விடயங்களை புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும் என் நம்புகிறேன். மத்திய தரைக்கடலில் காணப்படும் மூன்றாவது பெரிய தீவு சைப்பிரஸ். சைப்பிரஸ் என்றால் கிரேக்க மொழியில் செப்பு என்று பொருள். சைப்பிரஸ் துருக்கியின் தென்திசை கடலோரமாகவும் சிரியாவின் மேற்குக் கரையோரமாகவும் இருக்கிறது.

சைபிரஸ் பலநூற்றாண்டு காலமாக சைப்பிரஸ் தீவு பினீசியன்ஸ் மற்றும் கிரேக்கர்கள் ஆகியோரது கொலனி நாடாக இருந்து வந்தது. 1571 ஆம் ஆண்டு துருக்கி அதனைத் தாக்கிக் கைப்பற்றியது. அங்கு பெருவாரியான துருக்கியரைக் குடியேற்றி தனது கொலனி நாடாக வைத்துக் கொண்டது.

முதலாவது உலகப் போர் வெடித்தபோது பிரித்தானியா சைப்பிரஸ் தீவைக் கைப்பற்றியது. 1925 இல் சைப்பிரஸ் பிரித்தானியாவின் கொலனி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. கிரேக்கத்தைத் தாய்நாடாகக் கருதும் சைப்பிரசில் வாழ்ந்த கிரேக்க மக்கள் சுதந்திரம் கேட்டுப் போராடினார்கள். சைப்பிரஸ் தீவு கிரேகத்தோடு இணைக்க வேண்டும் என்றும் போராடினார்கள்.

1955 இல் சைப்பிரஸ் போராளிகளின் தேசிய அமைப்பு (EOKA) பிரித்தானியாவுக்கு எதிராக ஒரு கெரில்லா போரைத் தொடங்கியது. 1958 இல் ஆயர் மாகாறியோஸ் (Archbiship Makarios) கிரேக்கத்தோடு இணைவதற்குப் பதில் சைப்பிரஸ் ஒரு சுதந்திரநாடாக மலரவேண்டும் என்றார். இதே சமயம் சைப்பிரஸ் துருக்கியர்கள் சைப்பிரஸ் தீவு கிரேக்கர் – துருக்கியர் மக்களிடை பிரிக்கப்பட வேண்டும் எனக் கோரினார்கள்.

சைப்பிரஸ் தீவு 1960, ஓகஸ்ட் 16 இல் சுதந்திரம் அடைந்தது. கிரேக்கர்களும் துருக்கியர்களும் இணைந்து ஒரு அரசியல் யாப்பை எழுதிக் கொண்டார்கள். ஆயர் மாகாறியோஸ் சைப்பிரஸ் தீவின் முதல் ஆட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் வெகுவிரைவில் கிரேக்கர்கள் – துருக்கியர் மத்தியில் சண்டை தொடங்கியது. 1965 இல் அய்க்கிய நாடுகளின் அவையின் அமைதிப்படை அங்கு அனுப்பப்பட்டது. 1974 ஆம் ஆண்டு யூலை 15 ஆம் நாள் ஆயர் மார்க்கோஸ் சைப்பிரஸ் தேசிய பாதுகாப்புப் படை நடத்திய புரட்சியில் பதவி கவிழ்க்கப்பட்டார்.

யூலை 20 இல் துருக்கி சைப்பிரஸ் தீவில் வாழும் துருக்கியரைக் காப்பாற்றும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறது எனக் கூறிக் கொண்டு அதன் மீது படையெடுத்து சைப்பிரசின் வடபகுதியை அண்டிய 37 விழுக்காடு நிலப்பரப்பைக் கைப்பற்றியது. இதனால் 180,000 கிரேக்கர்கள் வடக்கில் இருந்து தெற்குக்கு ஏதிலிகளாக இடம் பெயர்ந்தார்கள்.

1974 யூலை 22 இல் அய்க்கிய நாடுகள் அவை இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது. துருக்கிப் படை சைப்பிரசில் நிலைகொள்ள அனுமதிக்கப்பட்டது. அதே ஆண்டு டிசெம்பர் மாதத்தில் ஆயர் மாகாறியோஸ் மீண்டும் ஆட்சித் தலைவராகப் பதவி ஏற்றார். அடுத்த ஆண்டு சைப்பிரஸ் தீவு கிரேக்கர் பகுதி துருக்கியர் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இடையில் அய்க்கிய நாட்டு அவையின் அமைதிப் படை நிறுத்தப்பட்டது.

1983 நொவெம்பர் 15 இல் துருக்கி சைப்பிரஸ் “வட துருக்கி குடியரசு” எனத் தன்னை ஒரு தலைப்பட்சமாகப் பிரகடனப்படுத்தியது. ஆனால் அய்ன்னா பாதுகாப்பு அவை அதனை அங்கீகரிக்க மறுத்தது. துருக்கி மட்டும் அதனை அங்கீகரித்தது. இரண்டு சைப்பிரசையும் இணைப்பதற்கு அய்ன்னா நடத்திய பேச்சு வார்த்தை வெற்றிபெறவில்லை. 2002 இல் கிரேக்க சைப்பிரஸ் அய்ரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து கொண்டது.

Brin Nath

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply