அமெரிக்காவின் சாதனை நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்சின் தழும்புகளுக்கு காரணம் என்ன?

usஅமெரிக்காவின் சாதனை நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தனது 19வது தங்கப்பதக்கத்தை பெறுவதற்கான போட்டியில் வெற்றி பெற்று ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார். இந்த பதக்கம் எந்த அளவுக்கு பிரபலமானதோ அந்த அளவுக்கு மைக்கேலின் தோள்பட்டையிலும் முதுகிலும் வட்ட வடிவத்தில் காணப்பட்ட தழும்புகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அது தீக்காயமாக இருக்கலாம் எனவும் பச்சை குத்திக்கொண்டிருக்கலாம் எனவும் பலர் கருதியிருக்கிறார்கள்.

ஆனால் அந்த தழும்புகளுக்கு கப்பிங் என்ற மருத்துவ முறை தான் காரணம். இது காயங்களை குணப்படுத்தவும் வலிகளை போக்குவதற்கும் பயன்படும் மருத்துவ முறை ஆகும்.

ஆசியாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பழங்காலத்திலிருந்தே இந்த சிகிச்சை முறையை மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். தற்போது சீனாவிலும் சில மேற்கு நாடுகளிலும் அதிகமாக வழக்கத்தில் இருக்கும் இந்த சிகிச்சையை ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களும் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply