Tuesday , July 25 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / உலகச் செய்திகள் / அமெரிக்காவில் அகோரம்! கட்டடங்களை விழுங்கிய நிலப்பிழவு

அமெரிக்காவில் அகோரம்! கட்டடங்களை விழுங்கிய நிலப்பிழவு

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் ஒரு பகுதியில் பாரிய நிலப்பிழவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தப் பிழவின் காரணமாக இரண்டு கட்டடங்கள் அதனுள் புதைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் அனர்த்தத்தின் காரணமாக அருகில் வசித்தோர் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தப் பிழவானது சிறியதாகத்தோன்றி பின்னர் விரிவடைந்து இரண்டு கட்டடங்களையும் விழுங்கியதைப்போல இருந்ததாக மக்கள் சொல்கின்றனர்.

இரு கட்டடங்களையும் முழுமையாக புதைக்கச் செய்யப்பட்ட இந்தப் பிழவினுள் கழிவி நீர் தேங்கி நிற்பதாகச் சொல்லப்படுகிறது. அருகிலுள்ள ஏரி நீர் இதனை நோக்கி மடைமாறும் ஆபத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தற்பொழுது அங்கே மீட்புப் பணிகள் தொடர்வதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

 

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top