Friday , October 20 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இந்தியா செய்திகள் / அமெரிக்கா இதில் தலையிட வேண்டாம் – இந்தியா எதிர்ப்பு!

அமெரிக்கா இதில் தலையிட வேண்டாம் – இந்தியா எதிர்ப்பு!

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பிரச்னை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்து வரும் சம்பவங்கள் பற்றி ஐ.நா சபை தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கடந்த 3-ம் தேதி அளித்த பேட்டியில், ‘இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும்’ என்றார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முயற்சி மேற்கொள்ளுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் கூறிய நிக்கி ஹாலே, “இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதட்டம் குறித்து அமெரிக்காவில் புதியதாக அமைந்துள்ள் டிரம்ப் நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்தி பதட்டத்தை தணிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். முந்தைய ஒபாமா அரசும் அதையே விரும்பியது. அந்த விஷயத்தில் டிரம்ப் ஆர்வமாக இருக்கிறார்.

பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்கா ஆர்வமுடன் இருக்கிறது. ஏதாவது நடக்கும்வரை நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரச்சினை பெரிதாகிக் கொண்டு தீர்க்கப்படாமல் நீடித்து வருகிறது. அதை இப்படி எத்தனை ஆண்டுகள்தான் விட்டுக் கொண்டு இருப்பது. அமைதியை உருவாக்க வேண்டியது நமது கடமை.

பேச்சுவார்த்தையில் ஒரு அங்கமாக நாங்கள் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அமைதி பேச்சுவார்த்தையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்க ஆர்வமுடன் இருக்கிறார்கள். அதிபர் டிரம்ப் பங்கேற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று கூறினார்.

அமெரிக்காவின் இந்த கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது. ‘பாகிஸ்தான் – இந்தியா இடையிலான பிரச்னைகளில் மூன்றாம் தரப்பின் பங்களிப்புக்கு இடம் தரமாட்டோம்’ என்று பதில் அளித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லய் கூறுகையில், “இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்னைகளை வன்முறை இல்லாமல் அமைதி வழியில் பேசி தீர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தானுடனான பிரச்சினையானது இரு தரப்புக்கும் இடையே மட்டுமே பேசி தீர்க்கப்பட வேண்டும். இதில் மூன்றம் தரப்பு தலையீ தேவையில்லை. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்தார்.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top