அரச விஞ்ஞானி Miss USA ஆகின்றார்!

miss5லாஸ் வெகாஸ்-யு.எஸ்.அணு ஒழுங்கு முறை ஆணையத்தில் ஒரு விஞ்ஞானியாக பணிபுரியும் காரா மக்குலோஹ் என்பவர் யுஎஸ்ஏயின் மிஸ் யுஎஸ்ஏயாக முடிசூட்டப்பட்டார். Naples, இத்தாலியை சேர்ந்த இவர் வேர்ஜினியா பீச் வேர்ஜினியாவில் பிறந்தார். அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறைகளில் வாழ்க்கை பணியை மேற்கொள்ள சிறுவர்களை ஊக்குவிக்க விரும்புவதாக தெரிவித்தார்.
50 மற்றய போட்டியாளர்களில் சிறந்தவராக தெரிவு செய்யப்பட்ட இவர் பிரபஞ்ச அழகி போட்டியில் யு.எஸ்.சார்பாக கலந்து கொள்ள உள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது தடவையாக நாட்டின் தலைநகரை சேர்ந்த பிரதிநிதி ஒருவர் மிஸ் யுஎஸ்ஏ தலைப்பை வென்றுள்ளார். கடந்த வருடம் கொலம்பியா மாவட்டத்தை சேர்ந்த டெஷ்கோனா பார்பர் மிஸ் யுஎஸ்ஏ ஆக தெரிவான முதல் இராணுவ அங்கத்தவராவார்.
தனது ஒரு வருட ஆட்சிக்காலத்தில் தனது அணு ஒழுங்குமுறை ஆணைய பணியிலிருந்து விடுப்பு எடுக்கலாமா என்பது குறித்து அவரது மேற்பார்வையாளருடன் கலந்துரையாடப் போவதாக தெரிவித்துள்ளார்.

miss

miss4

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply