அலாஸ்காவில் மிதமான நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6-ஆக பதிவாகியது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ”அமெரிக்காவின் மேற்கு கடற்கரை நகரமான அலஸ்கா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6-ஆக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தினால் குறைந்த அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்“என்று கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி பாதிப்பு ஏதும் இல்லை என்று பசுபிக் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply