ஆரவ் கொடுத்த முத்தத்தின் பெயர் என்ன? பிந்து மாதவியிடம் பிக்பாஸ் கேட்ட கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியா சென்ற பிறகு விறுவிறுப்பு குறைந்துள்ளது என்பதே உண்மை. கடந்த சில நாட்களாக சுவாரசியம் இல்லாத நிலையில் இன்று ஒவ்வொருவரிடமும் 5 கேள்விகள் கேட்கப்பட்டது.

இதில், ஓவியாவை நீச்சல்குளத்தில் தள்ளிவிட்டது யார், பரணி வெளியே சென்ற போது அணிந்திருந்த சட்டை நிறம் என்ன என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது.

இதில் பலர் சரியான விடைகளை அளித்தனர். ஆனால் பிந்து மாதவி ஒரு கேள்விக்கு மட்டுமே சரியாக பதில் அளித்தார்.

அவரிடம், ஆரவ் கொடுத்த முத்தத்தின் பெயர் என்ன என்று பிக்பாஸ் கேட்டார். முழித்த பிந்துமாதவி கிஸ் கொடுத்தார் என்பது தெரியும். ஆனால் அதன் பெயர் என்னவென்று தெரியாது என்றார்.

அது மருத்துவ முத்தம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே..

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply