ஆலயத்திற்குள் நுழைவதற்கு முன்னர் செய்ய வேண்டியவை

34_big

ஆலயத்திற்குள் நுழையும் முன்னர் முதலில் எமது பாதத்தை கழுவ வேண்டும். பின்னர் கால், கைகளை கழுவிய பின் சில துளிகளை தலையில் தெளித்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் எமது உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும். பின்னர் வாயிற்காப்போர்களான துவாரபாலகர்களை வணங்கி அனுமதி பெற்று உள்ளே செல்ல வேண்டும்.

உள்ளே செல்வதற்கு முன்னர் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும். அந்த படியை தாண்டும் போது, ‘நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே செல்கின்றேன். இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும், நல்ல வினைகளுமே எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா ‘ என்று வணங்கியவாறே படியை தாண்ட வேண்டும்.

படியின் மேல் நின்று கடந்தால் அவற்றை எம்மோடே எடுத்து செல்வதாக அர்த்தமாகும்.

ஒரு ஆலயம் என்பது நாள் முழுவதும் கூறப்படும் மந்திரங்களாலும், நாதஸ்வரம், கெட்டி மேள சத்தங்களாலும், பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும், முழுதும் நேர்மறை எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும்.

எனவேதான் மனநிறைவை பெறுவதற்கு ஆலயங்கள் சென்று இறைவனை வழிபடுகின்றோம்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply