இணையத்தில் வெளியான புதிய ஆப்பிள் ஐபோன் புகைப்படம்

பிரபல மொபைல் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் 2017ம் ஆண்டிற்கான புதிய ஐபோன் மொடலின் புகைப்படம் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் ஐபோனின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் பிரபலமாகி வருகிறது. ஃபாக்ஸ்கான் தரப்பில் இருந்து வெளியாகி இருக்கலாம் என கூறப்படும் புதிய ஐபோன் புகைப்படத்தில் அதன் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டில் வெளிவரவுள்ள ஐபோனின் ஒரு மொடல் 5.8 இன்ச் தொடுதிரையுடன் வழக்கமான ஹோம் பட்டன் நீக்கப்பட்டு முன்புற திரையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S8 மொபைலானது இதே போன்ற வசதியுடன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ஐபோனின் கைரேகை ஸ்கேனரானது முன்பக்க திரையிலேயே பொருத்தப்படலாம். முந்தைய கைரேகை ஸ்கேனர்களின் பதிப்புகளைவிட இது வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

செல்பி கமெரா மற்றும் லைட் சென்சார் போன்றவையும் திரையிலேயே வடிவமைக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.

முன்பக்கத்தில் உள்ள ஒரே ஒரு துளை ஸ்பீக்கருக்காக மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஐபோனின் பெயர் குறித்து எதும் வெளியாகவில்லை. இதற்கு முன்னர் வெளியான தகவல்களின்படி 2017 -ல் வெளியாகும் ஆப்பிள் ஸ்மார்ட் போன் ஐபோன் X அல்லது ஐபோன் 8 என அழைக்கப்படலாம் என கூறப்பட்டது.

மேலும் ஐபோன்களின் பெயர்களில் எண்களின் பயன்பாட்டை நிறுத்தப்போவதாக ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது என கூறப்படுகின்றது.

ஏற்கனவே முழுமையான தொடுதிரையினை வழங்குவதற்கான காப்புரிமையினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. OLED திரையுடன் 4மிமீ தடிமன் கொண்ட பெசல்கள் வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply