இந்தியாவை ஏழை நாடு என விமர்சித்த ஸ்னாப்சேட் தலைமை நிர்வாகி: கொந்தளித்த மக்கள்

இந்தியா போன்ற ஏழை நாட்டில் தமது தொழில் இறுவனத்தை விரிவாக்கம் செய்வதில் உடன்பாடில்லை என விமர்சித்த ஸ்னாப்சேட் தலைமை நிர்வாக அதிகாரிக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஸ்னாப்சேட் தலைமை நிர்வாக அதிகாரி Evan Spiegel தமது கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருந்த போதும் சமூக ஊடகங்களில் ஸ்னாப்சேட்டுக்கு எதிராக கடும் விமர்சனம் தொடர்ந்து வருகிறது.

மட்டுமின்றி #BoycottSnapchat மற்றும் #UninstallSnapchat போன்ற ஹேஸ்டேக்கள் இந்திய அளவில் மிக பிரபலமாகியுள்ளது.

ஸ்னாப்சேட் செயலி நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் ஊழியர் ஒருவர் அளித்த பேட்டியில், இந்தியா மற்றும் ஸ்பெயின் போன்ற ஏழை நாடுகளில் தொழில் விரிவாக்கம் செய்வதில் தமக்கு உடன்பாடு இல்லை என தலைமை நிர்வாக அதிகாரி Evan Spiegel தம்மிடம் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊழியரின் இந்த கருத்து பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன் சமூக வலைதளங்களில் குறித்த செயலிக்கு எதிராக கடுமையான விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து தலைமை நிர்வாக அதிகாரி Evan Spiegel தாம் அப்படி ஒரு கருத்தை கூறவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஸ்னாப்சேட் செயலியை இந்தியாவில் தடை செய்யும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால் உள்ளிட்டவர்களுக்கு பொதுமக்கள் இணையம் வழியாக மனு அளித்து வருகின்றனர்.

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply