Wednesday , October 18 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் / இனவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது: பொலிஸார் தகவல்!

இனவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது: பொலிஸார் தகவல்!

Priyantha-Jayakody

இனவாதத்தைத் தூண்டி, இனங்களுக்கிடையில் குழப்பங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 பேரை இதுவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சமூக வலைத்தளங்களில் இனவாதம், மதவாதம் பேசுவோர் மற்றும் பரப்புவோரை விஷேட பொலிஸ் குழு கண்காணித்து வருவதுடன், நல்லிணக்கத்துக்கு எதிராகச் செயற்படுவோர் எவராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இன, மதவாதங்களை தூண்டும் விதத்தில் கருத்து வெளியிடுவதாக கூறப்படும் அரசியல்வாதிகள் பலர் தொடர்பிலும், சமூக வலைத்தளங்கள் குறித்தும் விசேட விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் இரு முஸ்லிம்களும், தமிழர் ஒருவரும், பிக்கு ஒருவர் உட்பட சில பௌத்தர்களும் காணப்படுகின்றனர். பொலிஸ் அதிகாரியொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றார்” என பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி மேலும் தெரிவித்தார்.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top