இனி இவர்தான் உலகின் வயதான மனிதர்!

oildஜமைக்கா நாட்டைச் சேர்ந்த வயலட் பிரவுன் உலகின் வயதான மனிதராக அறியப்பட்டிருக்கிறார். இவருக்கு இப்போது 117 வயதாகிறது.

உலகின் அதிக வயது வரை வாழும் மனிதர்களில் இத்தாலியைச் சேர்ந்த எம்மா மொரானோ என்ற பெண்மணியே இருந்து வந்தார். இவர் சில தினங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதையடுத்து உலகில் வாழும் வயதான மனிதராக ஜமைக்காவை சேர்ந்த வயலட் பிரவுன் அறியப்பட்டிருக்கிறார். 1900-ம் வருடம் பிறந்த இவருக்கு இப்போது 117 வயதாகிறது.

இதுகுறித்து பிரவுன் கூறுகையில், ‘பலரும் என்னிடம் என்ன உணவு எடுத்துக் கொள்கிறீர்கள் என கேட்கிறார்கள். நான் பன்றிக்கறி, கோழி இறைச்சியைத் தவிர அனைத்தையும் உண்கிறேன்.

மதுபானப் பொருள்களையும் நான் எடுத்துக் கொள்வதில்லை’ எனக் கூறியுள்ளார். தற்போது ஜமைக்காவில் தனது 97 வயது மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார் வயலட் பிரவுன்.

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply