இன்டெல் நிறுவனத்தை ஓவர்டேக் செய்தது சாம்சுங் நிறுவனம்!

கணனி வகைகள் உட்பட அனைத்துவிதமான மொபைல் சாதனங்களுக்கும் மைக்ரோ சிப் ஆனது அத்தியாவசியமான ஒன்றாகும்.

இவ்வாறான மைக்ரோசிப்களை பல்வேறு நிறுவனங்கள் வடிவமைத்து அறிமுகம் செய்த போதிலும் இன்டெல் (Intel) நிறுவனம் முன்னணியில் திகழ்ந்து வந்தது.

ஆனால் தற்போது இந்த நிறுவனத்தினையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தினை சாம்சுங் நிறுவனம் பிடித்துள்ளது.

இரண்டரை தசாப்தங்களாக மைக்ரோசிப் வடிவமைப்பில் முன்னணியில் திகழ்ந்த மிகவும் பிரம்மாண்டமான நிறுவனமாக இன்டெல் காணப்பட்டிருந்தது.

இவ் வருடத்தின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் குறைகடத்திகள் மூலம் இன்டெல் நிறுவனம் 14.8 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியிருந்தது.

ஆனால் அதே காலாண்டுப் பகுதியில் சாம்சுங் நிறுவனமானது குறைகடத்தி விற்பனை ஊடாக 15 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டே சாம்சுங் நிறுவனம் முன்னணிக்கு வந்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply