இன்றுமுதல் இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ்

GSP

கடந்த ஆட்சிக்காலத்தில் இழந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இன்றுமுதல் இலங்கைக்கு மீண்டும் வழங்கப்படுகிறது.

இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் 6 ஆயிரத்து 600 பொருட்களுக்கான வரிச்சலுகை இலங்கைக்கு கிடைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் நிலவிய மனித உரிமை மீறல்களை காரணங்காட்டி, குறித்த வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவதை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்திக்கொண்டது.

தற்போது நிலவும் நல்லாட்சி அரசாங்கத்தில் சர்வதேச மனித உரிமைகள் சார்ந்த சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைத்துள்ளதால் இது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைவதுடன், 20 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் என வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply