இமயமலையில் கொடூரமாக சுற்றித் திரியும் மனிதர்.. தொடரும் மர்மங்கள்

emajaஇமயமலைத்தொடர்களில் 0 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் மர்மங்கள் நிறைந்த அதிசய மனிதன் வாழ்ந்துவருவதாக தகவல்கள் வருகின்றன. சராசரி மனிதனைக் காட்டிலும் 2 மடங்கு பெரிய உடல் கொண்ட, பார்ப்பதற்கே அருவருப்பான முகமும், பெரிய கொம்புகளும் கொண்டு மனித உருவில் கரடியைப் போல இருப்பான்

அந்த மர்ம மனிதன். மர்மங்கள், அமானுஷ்யங்கள் மற்றும் புதிர்கள் என எதிவாக இருந்தாலும் அதை கேட்பவர்கள் ஆராயத் தொடங்கிவிடுவார்கள்.

அந்த வகையில் இங்கு நாம் பனிக்கரடி மனிதனை பற்றி பார்க்கலாம் வாருங்கள்!

இவன்தான் அந்த மர்ம மனிதன்

கரடியைப் போல உருவமைப்பு கொண்ட மர்ம மனிதன் இப்படித்தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எட்டி என்ற பெயர் கொண்ட இந்த மர்ம மனிதன் இமயமலைப் பகுதியில் வாழ்ந்து வருவதாக அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்பவர்கள் நம்புகின்றனர்.

மனிதக் கரடியைப் போலிருந்தாலும் இவனுக்கு ஒற்றைக் கண்ணும், அகன்ற காதுகளும் இருப்பதாகவும், அதை நேரில் பார்த்திருப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். இன்னும் சிலர் அந்த மனிதனுக்கு இரண்டு கண்கள் இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

மனிதக் கரடியைப் போலிருந்தாலும் இவனுக்கு ஒற்றைக் கண்ணும், அகன்ற காதுகளும் இருப்பதாகவும், அதை நேரில் பார்த்திருப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். இன்னும் சிலர் அந்த மனிதனுக்கு இரண்டு கண்கள் இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

எங்கெல்லாம் வாழ்கிறான் தெரியுமா?

வானரம் போன்ற உருவத் தோற்றமும் சராசரி மனிதனை விட இருமடங்கு அதிக உயரமும் கொண்டு இமயமலையில் இந்த மனிதன் வசிக்கிறான் என்று நேபாளம், பூடான், திபெத் பகுதிகளில் நம்பப்படுகிறது.

பொதுவாகவே மனிதர்கள் 100 ஆண்டுகளை கடந்து வாழ்வது அரிதிலும் அரிது. ஆனால் இந்த மர்ம மனிதன் நூற்றாண்டுகள் கடந்து வாழ்வதாக நம்பப்படுகிறது.

கற்பனைக் கதை

அறிவியல் சமூகம் வழக்கம்போல் இந்த கதை கட்டுக்கதை என்று நிராகரித்துவிட்டது. அப்புறம் என்ன அவ்ளோதானே என்று விட்டுவிடாதீர்கள். இங்குதான் ட்விஸ்ட் வைத்தனர் அதே அறிவியலாளர்களில் ஒரு பகுதியினர்.

சுவாரசியமான விடயம்

இந்த மர்மத்தை பற்றிய சுவாரசியமான விடயம் என்னவென்றால், அறிவியலாளர்கள் சிலர் ரோமங்களைக் கொண்டு செய்த மரபியல் ஆராய்ச்சியில் ஒரு திடுக்கிடும் உண்மை தெரியவந்தது. பயங்கரமான அருவறுப்பான கரடி மனிதன் எட்டி உண்மையில் இருக்கிறான் என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவு. ஆனால்

ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை என்ன

நீளமான கை, கால்களையுடைய, உடல் முழுவதும் ரோமங்கள், முதுகுதண்டு கொண்ட கரடியைப் போன்ற பெரிய உருவம் ஒன்று இமயமலையில் வாழ்கிறது அல்லது வாழ்ந்துள்ளது என்பதே ஆராய்ச்சியில் வந்த உண்மை. புராணகால பனிக்கரடி என சொல்லப்படும் ஒரு உயிரினத்துடன் ஒப்பிடுகையில் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

நேரில் வந்த பனிமனிதன்

22 ஆயிரம் அடி உயரத்தில் லோக்பாலா எனும் இடத்தில் பர்ரி ஒரு விசித்திர மனிதனைக் கண்டுள்ளதாக தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அங்க அடையாளங்கள்

மனிதனைப் போன்றே பெரிய காலடித் தடம் ஒன்றையும், மின்னல் வேகத்தில் ஓடும் ஒரு பனி கரடியையும் கண்டதாக அவர் தமது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

நேபாளம் தான் சாட்சி

நேபாளத்தில் உள்ள கும் ஜங் மனாஸ்டரி எனும் மடாலயத்தில் எட்டியின் தலை உள்ளது

பனிமனிதன் கரடி மனிதன்

மர்ம மனிதனைப் பற்றிய தகவல்கள் பல்வேறு விதத்தில் பேசப்பட்டு வந்தாலும், இன்றுவரை அதிகாரப் பூர்வமாக எந்த அறிக்கையும் நமக்கு கிடைக்கவில்லை. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், மக்களின் நம்பிக்கை என்ற ஒன்று எப்போதும் மதிக்கப்படவேண்டியதே. கடவுள்கள் கூட அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லைதானே.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply