இறுதிப் போட்டியில் மே.தீவுகள் – இங்கிலாந்து மோதல்

14064219941உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், இன்று இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் நிறைவில், 2 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்படி 193 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன், அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது.

அந்த அணி, 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து, 196 ஓட்டங்களை விளாசியது.

இதற்கமைய 7 விக்கெட்டுக்களால் மேற்கிந்திய தீவுகள் வெற்றி வாகை சூடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

முன்னதாக நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதியில் நியூஸிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

எனவே இம்முறை 20க்கு இருபது உலகக் கிண்ண இறுதிப் போட்டி எதிர்வரும் 3ம் திகதி கல்கத்தாவில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் இடம்பெறவுள்ளது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply