இலங்கைக்கு அடுத்த அதிரடி வீரர் தயாராகிறார்

sanathஇலங்கை அணிக்கு அடுத்த அதிரடி வீரர் தயாராகி வருகிறார். தனது மகனை தயார்படுத்தும் வகையில் சனத் ஜெயசூரிய அவருக்கு பயிற்சியளித்து வருகிறார்.  இலங்கைக் கிரிக்கெட் அணியில் அதிரடி தொடக்க வீரராக காலடி பதித்தவர் முன்னாள் அணித் தலைவரான சனத் ஜெயசூரியா.  இடது கைதுடுப்பாட்ட வீரரான சனத், டெஸ்டில்  6973 ஓட்டங்களையும் ஒருநாள் போட்டியில்  13,430 ஓட்டங்களையும் குவித்து சாதனைப் படைத்தவர். மேலும் இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு சிறந்த பங்களிப்பு செய்துள்ளார்.  இந்நிலையில் தனது மகன் ரனுக்கிற்கு கிரிக்கெட் பயிற்சியளித்து வருகிறார். சனத் ஜெயசூரியாவைப் போலவே இடது கை துடுப்பாட்ட வீரரான ரனுக்கும் தனது தந்தையின் அறிவுரைப்படி தீவிர பயிற்சி எடுத்து  வருகிறார்.  இதனால் அடுத்த சனத் ஜெயசூரியவை இலங்கைக் கிரிக்öட் அணியல் விரைவில் எதிர்பார்க்கலாம்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply