இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிக்க விசேட வரிச்சலுகைகள்: ரவி

1.11

நாட்டில் முதலீட்டாளர்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில், விசேட வரிச்சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிதியமைச்சில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மேற்படி வரிச்சலுகையானது, முதலீடு செய்யப்படும் நிதி, அதன் மூலம் உள்வாங்கப்படும் வேலைவாய்ப்புக்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் பிரதேசம் ஆகியவற்றின் மூலம் தீர்மானிக்கப்படும்.

வருடாந்தம் 5 தொடக்கம் 6 பில்லியன் டொலர்கள் வருமானத்தினை ஈட்டக்கூடிய முதலீடுகள் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் அவர்களுக்கான சகல வசதிகளையும் வழங்கும். குறித்த வரிச்சலுகை தொடர்பான சட்டவரைபு விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது” என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply