இளம் சூடான நீரே ஆரோக்கியத்திற்கு சிறந்தது

download (70)

சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில நொதியங்கள், அமிலங்களை சுரக்கின்றன. ஆகையால் உணவு உட்கொண்ட பின்னர் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உணவு உட்கொண்ட பின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு சிறந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் கலங்கள் உருவாகின்றமை தடுக்கப்படுகின்றதாம்.

சூடான நீர் அருந்துவதால் உணவு எளிதில் செரிமானம் அடைவதோடு உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் கொழுப்புக்களையும் தடுக்கிறது. எனவே சாப்பிட்டு முடித்ததும் இளம் சூடான தண்ணீர் குடிக்கலாம் என பரிந்துரைக்கின்றனர்.

குளிர்நீர் பருகுவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும். இது இதயநோய் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்நீர் பருகுவதால் உணவில் உள்ள எண்ணெய்த் துகள்கள் திரண்டு உணவு செரிமானம் அடைவதில் பிரச்சினை ஏற்படுகின்றது. அத்துடன் எமது உடலில் உள்ள கொழுப்பின் அளவும் அதிகரிக்கின்றது.

குளிர்நீர் பருகுவதால் இதயம், சிறுநீரகம் தொடர்பான பல பிரச்சினைகள் வரலாம். எனவே வெதுவெதுப்பான நீரே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply