உங்கள் அன்ரோயிட் கைப்பேசியை Root செய்துள்ளீர்களா?

அன்ரோயிட் இயங்குதளத்தில் சில வசதிகளை பயன்படுத்த முடியாத நிலையில் அவற்றினைப் பெற்றுக்கொள்வதற்காக Root செய்வது வழக்கமாகும்.

எனினும் இந்த முறை அன்ரோயிட் விதிமுறைகளுக்கு முரணானதாக இருந்த போதிலும் இலவசமாக கிடைக்கும் இயங்குதளம் என்பதனால் பிரச்சினைகள் எதுவும் பாரிய அளவில் ஏற்படுவதில்லை.

இருந்தும் முதன் முறையாக Netflix நிறுவனம் ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அதாவது Root செய்யப்பட்ட அன்ரோயிட் கைப்பேசிகளில் தனது அப்பிளிக்கேஷன் இயங்காது என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் சில நாட்களிலிருந்து இந்த அறிவித்தல் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை கூகுள் நிறுவனத்தினால் சான்றிதழ் வழங்கப்படாத கைப்பேசிகளுக்கும் இதே நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply