உடல் எடையை குறைக்க பல வழி இருப்பினும் இது தான் சிறந்த வழி

h5

இன்றய பெண்களுக்கு தாங்கள் உடல் குண்டாக இரக்கின்றோமே என்பது பெரும் கவலை. மெல்லியதாக இருப்பது தான் அழகு என்ற எண்ணத் தோற்றப்பாடு இன்றய பெண்கள் மத்தியில் ஏற்பட்டதன் விளைவாக மெல்லி உடலை விரம்புகின்றனர் பெண்கள்.

இந்த நிலையில் அவர்களின் விருப்பிற்கு விபரீதம் ஏற்படுத்தும் வகையில் இன்றய உணவுப் பழக்கவழக்கங்கள் அவர்களை குண்டாக்கி விடுகின்றன. கடைகளில் கிடைக்கும் கொழுப்பம் கலோரியும் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் பெண்கள் உடலும் எடையின்றி இருக்க வேண்டும் என விரும்புவது தவறல்லவா?

இவ்வாறு நன்றாக சாப்பிட்டு உடல் எடையை ஏற்றி விட்டு பின்னர் மெலிய வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் இருப்பத அல்சர் வாய்வுத்தொல்லை உட்பட பல்வேறு நோய்களுக்கு முகம் கொடுக்க வைத்துவிடும். எனவே சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என்பதெல்லாம் பொய்.

ஆகவே உடலின் எடையை குறைக்க வேண்டுமாக இருப்பில் பின்வரும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்.

காலை

காலை நேரம் உணவை உட்கொள்ளும் பொழுது மா சத்து உணவை உட்கொள்ளலாம். பால் குடிக்கலாம் முட்டை ஒன்று உட்கொள்ளலாம் ஆனால் அரிசிமாவினால் செய்யப்பட்ட உணவுகளாக இருக்க வேண்டும்.

மதியம்

மதிய உணவில் சோறு இரண்டு அல்லது 4 கைப்பிடி எடுத்தால் போதும். மிகுதிக்கு கறி புரதம் மற்றும் இருப்பு விற்றமின் சேர்ந்ததாக இருக்க வேண்டும். கொழுப்பு மற்றம் காபோவைதரேற் உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதே சிறந்தது.

இரவு

இரவில் உணவு தேவையில்லை. பால் 1கப் மற்றும் பச்சை அப்பிள் ஒன்று சாப்பிட்டால் இரவுக்கு போதும். இல்லை பசி எடுக்கும் தாங்க முடியாது என்று உணர்ந்தால் மூன்று இடியப்பம் மற்றும் பச்சை அப்பிள் ஒன்று பால் அரைக் கப் குடிக்கலாம். பாலை படுக்கும் பொழுது குடித்தால் சிறந்தது.

குறிப்பு- மெலிவதற்கு உணவு உட்கொள்ளாமல் இருப்பது வலியல்ல. உணவில் கொழுப்பு காபோவைதரேற் முற்றாக தவிர்த்தல் மற்றும் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்தல். அத்துடன் நொரக்கு பண்டங்களை தவிர்த்தல் இதன் மூலமே சீக்கிரம் உடல் எடையை குறைக்க முடியும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply