உடைந்து போயுள்ள மனநிலையை சீர்திருத்தம் செய்ய வேண்டும்

1828711462ranjithவடக்கு மக்களின் மனநிலையில் நல்லாட்சியினை காணமுடியவில்லை அதற்காக நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்படவேண்டும் என பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட பொதுமக்களுக்கான யாழ் விடுமுறை விடுதி திறப்பு நிகழ்வு நேற்று யாழ் குறிகட்டுவான் வீதி அல்லைப்பிட்டி பகுதியில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, சிறுவர்,பெண்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கான யாழ் விடுமுறை விடுதி திறந்துவைத்தனர்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினாராக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த முப்பது வருட காலப்பகுதியின் பின்னர் இந்த வடக்கு வாழ் மக்களின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டது. அதனால் என்னேவோ இன்று வடக்கு மக்களின் மனநிலையில் நல்லாட்சியினை காணமுடியவில்லை எனவும் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு பிரதேசத்தினை கட்டியெழுப்ப நல்லாட்சியினை கொண்ட ஆட்சி தற்போது உள்ளது. பௌதீக ரீதியாக செய்யப்படுகின்ற அபிவிருத்திகளை விட சிங்கள, தழிழ், இஸ்ஸாமியம் என்ற வேறுபாட்டுக்கு அப்பால் மக்களுடைய உடைந்து போன மனதினை சீர்திருத்தம் செய்ய கூடியவை தான் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.

இராணுவத்தின் கீழ் காணப்படுகின்ற மக்களின் காணிகள் இன்று திரும்ப அளிக்கப்பட்டு வருகின்றது. தற்போது அபிவிருத்தியினை துரிதமாகக்கும் சூழலாக அமைந்துள்ளது.

இன்றும் இனவாதக்கட்சிகள் இனவாதத்தினை தூண்டும் சூழல் காணப்படுகின்ற போதிலும் அவற்றிற்கு எதிராக எமது அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

சிங்கள பிரதேசத்தில் இருக்கின்ற அரச உத்தியோகத்தர்கள் தழிழ் பிரதேசத்திற்கு வரவேண்டும். அதே போன்று தழிழ் பிரதேசத்தில் இருக்கின்றவர்கள் சிங்கள பிரதேசத்திற்கு செல்லவேண்டும். அப்போது நாட்டின் அபிவிருத்தியில் மொழி விருத்தியும் தொடர்பாடல் வளர்ச்சியும் அடையும். அதனை நாம் எதிர்பாக்கின்றோம்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply