உலகின் இயற்கைச் சூழலிற்கு நெருங்கி வரும் பெரிய ஆபத்து!

உலகின் இயற்கைச் சூழலிற்கு நெருங்கி வரும் பெரிய ஆபத்து!வட துருவத்தில் கடல் மட்டம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத வகையில், வட துருவத்தில் இரண்டாக பிளவுபட்டுள்ள மிகப்பெரும் பனிப்பாறைத் தொடரினால் உலகின் இயற்கைச் சூழலில் ஆபத்து மிகுந்த மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீண்ட காலமாக வட துருவ விஞ்ஞானிகளால் கண்காணிக்கப்பட்டு வந்த லார்சென் பி பகுதியிலே பனிப்பாறைத் தொடர் பிளவுண்டுள்ளது.

அண்ணளவாக 5,800 கிலோ மீற்றர் சதுர பரப்பளவினைக் கொண்டதாகவும், 350 மீற்றர் உயரம் கொண்டதாகவும் குறித்த பனிப்பாறை அமைந்துள்ளது.

இந்த பனிப்பாறை உடைவுக்கு ஏ86 என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

ஏற்பட்டுள்ள இந்த பனிப்பாறைத் பிளவினால் எத்தகை மாற்றங்கள் கடல் மட்டத்தில் ஏற்படும் என்ற கேள்விக்கு, கப்பல்களின் கடல் போக்குவரத்து வழித்தடத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டிய தேவை உடனடியாக ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த பிளவின் காரணமாக கடல் மட்டம் உயரும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply