உலகின் மிகப்பெரிய இதயம் ரொறொன்ரோ அருங்காட்சியகத்தில்

உலகின் மிகப்பெரிய இதயம், ரொறொன்ரோ றோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

56 மில்லியன் வருடங்களாக உயிர்வாழும் உலகின் மிகப்பெரிய நீர்வாழ் உயிரினமான நீல திமிங்கிலத்தின் இதயமே இதுவாகும்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த 76.5 அடி கொண்ட நீல திமிங்கிலத்தை ஆராய்ச்சி செய்த போது, 180 கிலோகிராம் எடையுடைய இதயம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் அதன் பாகங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதோடு, எலும்புகளையும் அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்த இதயத்தையும் எழும்புகளையும் பெருமளவானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஒன்ராறியோ அருங்காட்சியகத்தின் பாலூட்டும் உயிரினங்கள் தொடர்பான ஆராய்ச்சியாளர் புர்டொன் லிம் குறிப்பிடுகையில், இவ்வாறான நீல திமிங்கிலத்தின் உடற்பாகங்கள் கிடைப்பது மிகவும் அரிதானதென குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, ஏனைய திமிங்கிலங்களைப் போல அல்லாது இவற்றில் கொழுப்பு குறைவாக காணப்படுவதால் இறந்தால் விரைவில் நீரில் மூழ்கிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நீல திமிங்கிலத்தின் இதயம், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதிவரை ஒன்ராறியோ அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply