எட்டு வயதில் மார்பகப் புற்றுநோய். நம்ப முடியவில்லையா?

bra2யு.எஸ்- தனது மார்பில் காணப்பட்ட கட்டியை இரகசியமாக மறைத்து வைத்திருந்த கிறிஷி ரேனர் மிக அரிதான புற்று நோய் கண்டறிதல் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் குணமடைந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

யுட்டா என்ற இடத்தை சேர்ந்த எட்டு வயதான இப்பெண்ணிற்கு அவளது இரட்டை மார்பகங்களும் அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. இச்சிகிச்சை கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றுள்ளது. இச்சத்திர சிகிச்சைக்கு ஆளான மிக இளவயது பெண் இவள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இவளிற்கு மேற்கொள்ளப்பட்ட அண்மைய நோயியல் சோதனைகள் மூலம் இவளிற்கு புற்று நோய் குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்பக புற்று நோய் பெண்களிற்கு வருவதையே கண்டும் கேள்விப்பட்டும் உள்ளோம். ஆனால் உங்கள் பிள்ளைக்கு அதுவும் எட்டு வயது மகளிற்கு வருவதை எவரும் ஒரு போதும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள் என இச்சிறுமியின் தாயார் அனெட்டா தெரிவித்துள்ளார்.

இவளது பெற்றோர்கள் இருவரும் தங்களிற்கு ஏற்பட்ட புற்று நோயுடன் போராடியவர்கள். தாயார் கர்ப்ப வாய் புற்றுநோயில் இருந்து தப்பியவர். தந்தை non-Hodgkin’s lymphoma எனப்படும் புற்று நோய்க்கு ஆளானவர்.

கிறிஷியை தாக்கியது ஒரு அரிதான வகை மார்பக புற்று நோய். Secretory Breast Carcinoma என அழைக்கப்படும். இதற்கு மிக கடுமையான சிகிச்சை முறை தேவைப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தனது மார்பில் ஒருவகை கட்டி இருப்பதை உணர்ந்த இவள் பயந்து பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து விட்டாள். மறைந்து விடும் என நம்பியுள்ளாள். கடைசியாக பெற்றோரிடம் கூறியதும் அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல அங்கு புற்று நோய் என உறுதிப்படுத்தப்பட்டது.

சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததும் மீண்டும் பாடசாலை செல்ல தொடங்கினாள்.

நோயுற்றிருந்த காலத்தில் அபரிதமான ஆதரவு கிடைத்தது. இவர்களது புழகுரனெஆந பக்கம் மூலம் டொலர்கள் 85,000 வரை கிறிஷியின் மருத்துவ செலவிற்காக திரட்டப்பட்டது.

brabra1

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply