எட்டோபிக்கோ பாலியல் துஷ்பிரயோகம்: அடையாளங்களை வெளியிட்டுள்ள பொலிஸார்

எட்டோபிக்கோ பாலியல் துஷ்பிரயோகம்: அடையாளங்களை வெளியிட்டுள்ள பொலிஸார்எட்டோபிக்கோ பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரின் அங்க அடையாளங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

வெஸ்ட் மோல் மற்றும் பேர்னெம்தோப் வீதிப் பகுதியில், கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த சிறுமியை அணுகிய இனந்தெரியாத ஒருவர், சிறுமியை பாலியல் ரீதியில் துண்புறுத்தியதாகவும், பின்னர் அங்கிருந்து டீஆறு ரக வாகனம் ஒன்றில் அவர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபரை கைதுசெய்ய தீவிரம் காட்டி வரும் அதிகாரிகள் அவரின் அடையாளங்களை வெளியிட்டுள்ளனர்.

தாக்குதல் நடாத்தியவர் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வெள்ளை இன ஆண் எனவும், சுமார் ஐந்து அடி எட்டு அங்குல உயரமும், மண்ணிற தலைமுடியும் கொண்ட அவர், சம்பவத்தின் போது கறுப்பு கண்ணாடியும், ஊதாநிற கட்டமிட்ட மேற்சட்டையும், கபிலநிற காற்சட்டையும் அணிந்திருந்ததாகவும் அதிகாரிகள் விபரித்துள்ளனர்.

இவர் குறித்து தகவலறிந்தவர்கள் தம்மை உடடியாக தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply