எமது திட்டங்களை அலட்சியபடுத்தியதாலேயே மீதொடமுல்ல அனர்த்தம் ஏற்பட்டது: மஹிந்த

Mahinda-Rajapaksa

தமது அரசாங்கத்தின் திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைபடுத்தியிருந்தால் மீதொடமுல்ல அனர்த்தம் ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி, அங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ‘எமது ஆட்சி காலத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வந்தோம். ஆனால், அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னரே நாம் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டோம்.

எனினும், நாம் வகுத்த திட்டங்களை இந்த நல்லாட்சி அரசாங்கம் அலட்சியம் செய்யாது முன்னெடுத்திருந்தால் மீதொடமுல்ல அனர்த்தம் ஏற்பட்டிருக்காது. அப்பாவி மக்களின் உயிர்களும் காவுகொள்ளப்பட்டிருக்காது’ என்றார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply