ஒரு வீட்டில் தெய்வ சக்தி அதிகம் இருக்க வேண்டுமா? அப்படியெனில் இதை செய்ய வேண்டாம்

Chittukuruvi

வீட்டில் சில செயல்களை செய்தால் தெய்வ சக்தி விலகிவிடும், சில செயல்கள் செய்தால் தெய்வ சக்தி கூடும் என சில இதிகாசங்கள் கூறுகின்றன. அவற்றில் தெய்வ சக்தியை அதிகரிக்கும் விடயமே இது.

வீட்டில் அணில், சிட்டுக்குருவி, புறா, போன்ற பறவை, விலங்குகள் இருந்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த உயிரினங்களுக்கு தெய்வ சக்தி அறியும் ஆற்றல் உள்ளதாம்.

ஆகவே, உங்கள் வீட்டு வாசலில் நெற்கதிரை கட்டி தொங்கவிடுவதால் குருவி, புறா போன்ற பறவைகள் அதை உண்ண வந்து செல்லும். இந்த சந்தர்பத்தில் அவை அங்கேயே கூடு கட்டி வாழ்ந்து குஞ்சு பொரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

புறா, குருவி போன்ற ஜீவசக்தி கூண்ட ஜீவன்கள் கூடு கட்டினால் அதனை கலைக்கக்கூடாது. தெய்வ சக்தி கொண்டு வரும் திறன் கொண்டவை இவை என்பதால், இவற்றின் கூட்டை கலைப்பது, வீட்டிற்கு கெட்ட சகுனமாக அமையலாம்.

புறா, குருவி போன்ற பறவைகள் மற்றும் அணில் போன்ற உயிரினங்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவற்றை விரட்ட வேண்டாம். இவை நமது வீட்டிற்கு வந்து போனாலே நமக்கு நல்லது நடக்கும். என இதிகாசங்கள் கூறுகின்றன.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply