ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கனுமா… உங்களுக்கான பத்து முத்தான ஆலோசனைகள்

ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கனுமா... உங்களுக்கான பத்து முத்தான ஆலோசனைகள் !!இந்தியாவை பொறுத்தவரை, இன்றைய நிலையில் பெரும்பாலான இளம் தலைமுறையினர்கள் உடல் பருமனால் அவதி படுகின்றனர்.

தங்களது உடல் எடையை குறைப்பதற்காக, தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை பார்த்து பவுடர்களையும், மாத்திரைகளையும் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் பணம் கரைவதோடு மட்டுமல்லாமல், உடலின் ஆரோக்கியமும் கரைகிறது. ஆனால் உடல் எடை குறைந்த பாடில்லை…

தினமும் சரியான உணவுடன், போதிய உடற்பயிற்சியை தவறாமல் கடைப்பிடித்து வந்தால், நிச்சயம் ஒரே வாரத்தில் ஐந்து கிலோ வரை உடல் எடையைக் குறைக்கலாம்.

இங்கு ஒரே வாரத்தில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிய கட்டாயம் பின்பற்ற செய்முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை அனைத்துமே பின்பற்றுவதற்கு ஏற்றவாறு மிகவும் சிம்பிளாகவே இருக்கும். சரி, இப்போது அது என்னவென்று பார்ப்போமா!

தண்ணீர்…. தண்ணீர்…

உடல் எடையைக் குறைக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாத ஒன்று. தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சீராகவும் ஆரோக்கியமாகவும் செயல்படும். மேலும் தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், உண்ணும் உணவுகளின் அளவு குறைந்து, அதனால் உடல் எடை அதிகரிப்பதும் தடுக்கப்படும்.

எலுமிச்சை + தேன் ஜுஸ் 

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைப்பதோடு, நச்சுக்களை வெளியேற்றி, விரைவில் எடையைக் குறைக்க உதவும். எனவே தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து ஜூஸ் போட்டு குடித்து வாருங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது எனர்ஜியாகவும் செயல்பட உதவும்.

உடற்பயிற்சியும் அவசியம் பாஸ்…

தினமும் உடற்பயிற்சி தினமும் காலையில் தவறாமல் முக்கால் மணிநேரம் உடற்பயிற்சியை செய்து வாருங்கள். மேலும் எந்த ஒரு இடத்திலும் லிப்ட் பயன்படுத்துவதை தவிர்த்து, படிக்கட்டுக்களை பயன்படுத்தினால், அடிவயிறு மற்றும் தொடையில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, வயிறு மற்றும் தொடை பிட்டாக இருக்கும்.

தூக்கமும் முக்கியம் :

எடையைக் குறைக்க தூக்கம் மிகவும் இன்றியமையாதது. போதிய அளவு தூக்கத்தை ஒருவர் மேற்கொண்டால், உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றல் மற்றும் ஸ்டாமினா கிடைக்கும். அதுமட்டுமின்றி, தூக்கம் போதிய அளவில் இருந்தால், மன அழுத்தம் குறைந்து, அதனால் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவது குறைந்து, அதன் மூலம் உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும்.

கலை உணவு கண்டிப்பா சாப்பிடணும் :

உடல் எடை குறைய வேண்டுமென்று பலரும் காலை உணவைத் தவிர்ப்பார்கள். ஆனால் ஒரு நாளில் மற்ற வேளைகளில் சாப்பிடுவதைக் கூட தவிர்க்கலாம், ஆனால் காலை உணவைத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது தான் அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றலை உடலுக்கு வழங்கும். அதிலும் காலையில் 10 மணிக்கு மேல் காலை உணவை எடுத்தால், உடலின் மெட்டபாலிக் அளவு குறைந்து, அதனால் உடலில் கொழுப்புக்கள் சேர்வது தான் அதிகமாகும். எனவே காலையில் 8-9 மணிக்குள் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அது சாதாரண இட்லி, தோசை, பிரட் டோஸ்ட், முட்டை, பழங்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

மசாலா உணவுகளை தியாகம் செய்யுங்கள் :

தற்போது கடைகளில் உணவின் சுவையை அதிகரிக்க கண்ட கண்ட மசாலாப் பொருட்களை சேர்க்கின்றனர். இதனால் பலரும் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர். இப்படி அடிமையாக இருக்கும் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை தவிர்த்தாலே, உடலில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகரிப்பதைத் தவிர்க்கலாம்.

உடலுறவு(கல்யாணம் ஆனவங்க மட்டும்) :

உடலுறவு கொள்வது என்பது வெறும் இன்பத்தை அனுபவிப்பது மட்டுமல்ல, அதற்கும் மேல் அதில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. முக்கியமாக உடலுறவு கொள்வதன் மூலம் கொழுப்புக்கள் கரையும். அதிலும் உடலுறவு கொள்ளும் போது, உடலின் கொழுப்புக்களை கரைக்க சரியான நிலை என்றால் அது மேலே உட்கார்ந்து கொண்டு செய்வது தான்.

கண்ணாடி முன் சாப்பிடுங்கள் :

உடல் எடையைக் குறைக்க நினைத்தால், ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் கண்ணாடி முன் அமர்ந்து சாப்பிடுங்கள். இதனால் உங்கள் உடல் எடையைப் பார்த்து, நீங்களே சாப்பாட்டின் அளவைக் குறைத்துக் கொள்வீர்கள். இதன் மூலம் தானாக உடல் எடை குறையும்.

நடைபயிற்சி : 

உடற்பயிற்சியிலேயே மிகவும் சிம்பிளான ஒன்று தான் வாக்கிங். இந்த உடற்பயிற்சியின் மூலம் உடலின் அனைத்து பாகங்களும் பிட்டாகும். அதிலும் தினமும் 30 நிமிடம் பிரிஸ்க் வாக் செய்தால், விரைவில் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் குறையும்.

க்ரீன் டீ :

க்ரீன் டீயின் நன்மைகளைப் பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் ஒன்று தான் உடல் எடை குறையும் என்பது. தினமும் காலையில் ஒரு கப் க்ரீன் டீயை குடித்து வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால், கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, நல்ல பிட்டான உடலைப் பெறலாம்.

நண்பர்களே இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க.. உடல் எடைய பிட்டா வச்சிகோங்க….

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply