ஒஸ்ரியாவில் தேர்தலில் செபஸ்டியன் குருஸ் வெற்றி

ஒஸ்ரியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் செபஸ்டியன் குருஸ் (வயது 31) வெற்றி பெற்றுள்ளார். இவர் உலகில் மிகவும் இளம் தலைவர் என்ற அந்தஸ்த்தைப் பெறுகின்றார்.

ஒஸ்ரியாவில் நேற்று நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு வாக்களித்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துவந்த பழமைவாத மக்கள் கட்சியின் தலைவரான செபஸ்டியன் குர்ஸ், அதிகளவான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இரண்டாவது இடத்துக்கு தீவிர வலதுசாரி சுதந்திரக் கட்சியும் சமூக ஜனநாயகக் கட்சியும் போட்டியிட்டன.

மேலும், தற்போது பிரதமராகவுள்ள சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் கிறிஸ்டியன் கெர்ன் (வயது 51), செபஸ்டியன் குர்ஸின் பழமைவாத மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்திவந்தார்.

இந்தக் கூட்டணியில் தொடர முடியாது என்று செபஸ்டியன் குர்ஸ் கூறியதைத் தொடர்ந்து, பொதுத் தேர்தல் நடத்த வேண்டிய நிலைமை உருவாகியது.

தேர்தல் பிரசாரத்தில் அகதிகள் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக உருவெடுத்தது. பொருளாதார வளர்ச்சி, புதிய வேலை வாய்ப்புகள், சமூக நீதி ஆகியவற்றுக்கு ஆதரவாக பிரசாரத்தின்போது, செபஸ்டியன் குர்ஸ் குரல் கொடுத்தார்.

தேர்தலில் 64 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply