கடலில் திடீர் சுகயீனமுற்ற மீனவரை கரைக்கு அழைத்து வந்த கடற்படை

கடற்றொழிலுக்கு சென்று திடீர் சுகயீனமுற்ற மீனவர் ஒருவரை கடற்படையினர் கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, தென் கடற்படை தளத்திற்கு சொந்தமான விரைவு படகொன்றின் உதவியுடன் குறித்த மீனவர் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பேருவளை பகுதியிலிருந்து கடந்த 6ஆம் திகதி கடற்றொழிலுக்காக சென்ற கேகரி-1 படகில் பயணித்த மீனவர் ஒருவருக்கு, திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர் கராபிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply