கடலுக்குள் கால்களை நனைத்த சிறுவனுக்கு கிடைத்த பகீர் அனுபவம்

அவுஸ்திரேலியா மெல்போர்னில் கடலில் கால் நனைக்க சென்ற சிறுவனொருவரை மரம்ப்பூச்சியொன்று கடித்துள்ளது.

மெல்போர்னைச் சேர்ந்த சாம் கனிஸாய்க்கு வயது 16. கால்பந்து விளையாடி விட்டு வந்த சாமுக்கு கடலில் காலை நனைக்க ஆசை ஏற்பட்டுள்ளது.

அதே போல செய்தார். அரை மணி நேரம் கழித்து கரைக்குத் திரும்பினால் இரண்டு கால்களிலும் இரத்தம் பீறிட்டு கிளம்பியிருக்கிறது.

’வலிக்காமலா இரத்தம் வருது?’ என்று சாம் கால்களைப் பார்த்தபோது திடீரென்று வலி விண்ணென்று தெறித்திருக்கிறது.

வீட்டுக்கு ஓடிய சாம், அவரின் அப்பாவிடம் கூறியுள்ளார்.

அவர் மகனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, கடலுக்குள் மகனின் கால்களை கடித்தது எது என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்.

மகன் கடலில் இறங்கிய இடத்தில் கொஞ்சம் இறைச்சியை போட்டு, சிறு வலையை வீசினார். சிக்கியது சிறு சிறு பூச்சிகள். அதை அப்படியே காணொளி பதிவு செய்து மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட்டார்.

அது என்ன பூச்சி என்று யாருக்கும் தெரியவில்லை.

அந்த மர்மப் பூச்சி பற்றி ஆளாளுக்கு ஒன்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் எல்லோரும் சொல்வது, ‘இதுக்கு முன்னால இப்படியொரு பூச்சியை பார்த்ததே இல்லை’ என்று வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply