கடவுளை வணங்கும் முறையில் உள்ள சம்பிரதாயங்கள்

satyanarayana_pooja_harivara-700x632

கடவுளை வணங்கும் முறையில் பல சாஸ்திர சம்பிரதாயங்கள் உண்டு என்கின்றனர் முன்னோர்கள். முன்னோர்கள் கூறும் சில ஆன்மீக தகவல்களை நாம் இங்கு தெரிந்து கொள்வோம். திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது. கோயில் மூடியிருக்கும் போதும் திருமஞ்சன பூஜையின் போதும் அல்லது திரையிட்டிருக்கும் போதும் கடவுளை வழிபடக் கூடாது.

எலுமிச்சம் பழ தீப விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. அதுவே மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம். குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக் கூடாது. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். குளிக்கக் கூடாது.

சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது.

இறந்த முன்னோர்களின் படங்களை சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைக்க வேண்டும்.

தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், நாள்குறிப்பு ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது.பசுக்களோடு மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம் மற்றும் விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும். வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானாக அணையவேண்டும். நாம் அணைக்க கூடாது.

கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்களின் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply