கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார் மோடி

narendramodipti-m

 ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் பண்டிகை தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி விசேட விமானத்தின் மூலமாக, தற்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர்களான சஜித் பிரேமதாச, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் விமான நிலையத்தில் இந்திய பிரதமரை வரவேற்றுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் பண்டிகை தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) மாலை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கைவரும் இந்திய பிரதமருக்கு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பலத்த வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து, நாளை காலை 9 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள ஐ.நா. சர்வதேச விசாக பண்டிகை நிகழ்வை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து முற்பகல் 11.15 மணிக்கு இந்திய அரசின் நிதி உதவியில் நவீன வசதிகளுடன் டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளார். பின்னர் டன்பார் மைதானத்தில் இடம்பெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார் என தொிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உடனான சந்திப்பு நண்பகல் 12 மணியளவில் நடைபெறவுள்ளது.

மேற்படி சந்திப்பை நிறைவுசெய்து கொண்டு கண்டிக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர், அங்கு தலதா மாளிகைக்கு விஜயம் செய்வார் என தொிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை மாலை 5 மணியளவில் இந்தியாவுக்கு புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை விமான நிலையத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை முன்னிட்டு, பாதுகாப்பு நோக்கில் கொழும்பில் இன்றும் நாளையும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply