Wednesday , July 26 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம் / பாட்டி வைத்தியம் / கண் இமைகள் அடர்த்தியாக வளர எளிய வழிமுறைகள்!

கண் இமைகள் அடர்த்தியாக வளர எளிய வழிமுறைகள்!

imai

விட்டமின் ஈ மாத்திரைகளில் இருந்து ஜெல் வடிவ மருந்தை எடுத்து, அதை ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலக்கி, இதனை தினமும் இரவில் ஒரு சிறிய பஞ்சியில் நனைத்து, ஒரு சொட்டு விட்டு கண் இமை முடி மீது நன்கு தேய்க்க வேண்டும். இந்த மருந்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் கண் இமை முடியின் அடர்த்தியை இரு மடங்கு வலுவாக்குகிறது.
  • ஒரு தேக்கரண்டி ஒலிவ் எண்ணெய் மற்றும் ஈமு எண்ணெய் ஆகியவற்றை எடுத்து நன்றாக கலந்து, அதை தினமும் இரவில் கண் இமை முடியின் மீது தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதில் உள்ள இயற்கையான உயர் கொழுப்பு அமிலங்கள் கண் இமை முடியை வலுவாக்கி நன்கு வளரச் செய்கிறது.
  • சிறிய அளவிலான பெட்ரோலியம் ஜெல்லியை ஒரு பழைய சுத்தமான மஸ்காரா கோலில் எடுத்து தினமும் இரவில், தூங்குவதற்கு முன் கண் இமை முடிகளின் மீது நன்கு தடவ வேண்டும். இதனால் நன்கு அடர்த்தியான கண் இமை முடிகள் கிடைக்கும்.
  • தினமும் சாதரணமாக கண் இமைகளை மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். எனவே நம்முடைய விரல்களில் ஒரு சில துளிகள் ஒலிவ் எண்ணெய் எடுத்து, விரல் நுனி வைத்து சூடாகும் வரை நன்கு தேய்த்து, மென்மையாக 5 நிமிடங்கள் வரை வட்ட இயக்க வடிவில் விரலை வைத்து கண் இமைகளை மசாஜ் செய்ய வேண்டும்.
  • விளக்கெண்ணெய் 2 தேக்கரண்டி எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை துறுவலை நன்கு கலந்து, பின் இதை 48 மணி நேரம் ஊற வைத்து, பின் அந்த எண்ணெயை மட்டும் தனியாக எடுத்து, தினமும் இரவில் சில துளிகளை எடுத்து கண் இமை முடிகளின் மீது தடவி வர வேண்டும்.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top