கனடாவின் 11வது மாகாணம் ஸ்கொட்லாந்?

scot4ஸ்கொட்லாந் ஐக்கிய ராஜ்யத்திலிருந்து விலகி கனடாவுடன் இணையும் என எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்கொட் ஐக்கிய ராஜ்யத்திலிருந்து வெளியேறி கனடாவுடன் இணைவது நல்ல தொரு யோசனை எனவும் இவர்தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந் ஐக்கிய ராஜ்யத்திலிருந்து விலகி சுதந்திரமாக இருப்பதற்கான மற்றுமொரு வாக்கெடுப்பு இடம் பெற உள்ளது. இதே சமயம் கனடிய எழுத்தாளர் ஒருவர் தீவிரமான தீர்வை முன்மொழிந்துள்ளார்-ஸ்கொட்லாந்தை 11-வது மாகாணமாக கனடாவுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
4.7-மில்லியன் கனடியர்கள் மத்தியில்   ஸ்கொட்லாந் நாட்டின் மரபுகொள்கை மற்றும் நாட்டின் கலாச்சார தாக்கங்கள் ஏற்கனவே ஆழமாக பதிந்து விட்டதென கென் மக்கூகன் அச்சில் வாதித்துள்ளார்.
நாங்கள் ஸ்கொட்லாந்தை அதிகமாக எம்மில் கொண்டுள்ளதுடன் மற்றய நாடுகளை விட கனடியர்கள் அதிக ஒரு முக சிந்தனையையும் கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
5.3-மில்லியன் சனத்தொகையை கொண்ட ஸ்கொட்லாந் கனடாவின் மூன்றாவது சனத்தொகை கூடிய மாகாணமாகவும் விளங்குமென எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ராஜ்யத்தில் இருப்பதை விட கனடாவில் ஸ்கொட்லாந் அதிக செல்வாக்கை கொண்டிருக்குமெனவும் scot5கனடாவின் மொத்த சனத்தொகையான 41.8-மில்லியன்களின் 12.6சதவிகிதத்தை ஸ்கொட்லாந் கொண்டிருக்கும். பிரிட்டிஷின் 65-மில்லியன்களில் ஆக 8சதவிகிதமே.
அனைத்து கனடிய மாகாணங்களும் அதிக சக்தி கொண்டவை, அதிக சுதந்திரம் கொண்டவை மற்றும் ஸ்கொட்லாந் தற்போது இருப்பதை விட சுயாட்சி கொண்டவை எனவும் மக்கூவன் தெரிவித்தார்.
மற்றய சாத்தியமன கவலைகளை விட கடல் சார்ந்த தூரம் மட்டுமே இரு நாடுகளையும் பிரிக்கின்றது.
இன்றய தொலை தொடர்பு, தொழில் நுட்பங்கள் மற்றும் விமான பயணங்கள் காரணமாக இன்றய நாட்களில் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ள ஆசிரியர் உதாரணத்திற்கு யு.எஸ்.ஐ காட்டியுள்ளார்.ஹவாயிலிருந்து கலிபோர்னியா 3,977கிலோ மீற்றர்கள் தொலைவில் உள்ளது. நியுபவுன்லாந்திற்கும் ஸ்கொட்லாந்திற்கும் இடை தூரம் 3,355கிலோ மீற்றர்களே.scot3

scot6

huff2

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply