கனடாவில் எச்சரிக்கை!

can3நீண்ட வார இறுதி நாட்களை எதிர் நோக்கும் கனடிய மக்களிற்கு கனடா புள்ளிவிபரவியல் மற்றும் கனடிய புற்றுநோய் சங்கம் தீங்கு விளைவிக்கும் ஊதா கதிர்வீச்சு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனடா புள்ளிவிபரவியலினால் தொகுக்கப்பட்டுள்ள புதிய கணிப்பீடு இக் கோடைகாலத்தில. ஊதா கதிர்வீச்சு அதிகரித்து காணப்படும் பகுதிகளில் தோல் புற்றுநோய் அபாயமும் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கின்றது.

ஒவ்வொரு ஊதா கதிர்வீச்சு மண்டலத்திலும் மெலனோமாவின் ஒட்டு மொத்த அபாயம் 22-சதவிகிதத்தால் அதிகரிக்கின்றதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக மொன்றியலை விட ரொறொன்ரோவில் வசிப்பவர்களிற்கு 16சதவிகிதம் அதிகரித்த அபாயம் இருக்கும் எனவும், எட்மன்டனை விட கல்கரி குடியிருப்பாளர்களிற்கு 38சதவிகிதம் அதிகரித்த அபாயம் எனவும் கனடா புள்ளிவிபரவியல் தெரிவிக்கின்றது.
தினசரி UV index, குறித்து 41சதவிகிதமான கனடியர்கள் கவனம் செலுத்தவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் தோல் புற்று நோய் மிகவும் பொதுவானதாக உள்ளது எனவும் மேலும் அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.கடந்த வருடம் 6,800 மெலனோமா நோயாளிகள் கனடாவில் கண்டறியப்பட்டுள்ளனர்.
மெலனோமா எனப்படும் தோல் புற்றுநோய் கனடாவில் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. சூரியனில் இருந்து வரும் யுவி வெளிப்பாடு மற்றும் தோல் பதனிடும் படுக்கைகள் போன்றன இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோல் பதனிடல் படுக்கையில் இருந்து பதனிடுதல் பாதுகாப்பற்றதாகும்.
சூரிய வெப்பத்திலிருந்து தோலை பாதுகாக்க சன்ஸ்கிரீன்-குறைந்தது 30 SPF அல்லது அதற்கும் அதிகமான-உபயோகிப்பது மற்றும் சூரியன் யுவி குறியீடு மூன்று அல்லது அதிகமாக இருக்கையில் வெளியில் செலவழிக்கும் நேரத்தை கட்டுப்படுத்துவது சிறந்ததென பரிந்துரைக்கப்படுகின்றது.

நெருக்கமாக நெய்யப்பட்ட ஆடைகளை அணிதல் பரந்து விரிந்த விளிம்புகள் கொண்ட தொப்பிகளை அணிதல் சிறந்தது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply