Monday , September 25 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / கனடாச் செய்திகள் / கனடாவில் காணாமல்போன தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு ;

கனடாவில் காணாமல்போன தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு ;

கடந்த ஞாற்றுக்கிழமை கனடாவின் ப்ரைரிஸ் (Prairies) நதியில் தவறி வீழ்ந்து தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயிருந்தார்.

காணாமப்போன இளைஞனைக் கண்டுபிடிப்பதற்கு 3 நாட்களாக மீட்ப்புப்படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் காணாமல் போன இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

20 வயதான அனோஷன் நாகேஸ்வரா என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மொன்றியலுக்கு மேற்கே Pierrefonds என்னும் இடத்தில் உள்ள ஆற்றிற்கு அருகே நின்று இவ் இளைஞன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது கால் தவறி ஆற்றிற்குள் வீழ்ந்துள்ளார்.

அவரை காப்பாற்ற உடன் சென்ற தோழி முயற்சி செய்தபோதும் அது பயனளிக்கவில்லை. எனினும் அவருக்கு நீச்சல் தெரியாதென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top