கனடாவில் கைப்பேசி பாவனையாளர்களுக்கு மகிழ்சியான செய்தி

ஒட்டாவா- செல்போன் நிறுவனங்கள் வெகு விரைவில் வாடிக்ககையாளர்களிடமிருந்து அவர்கள் தங்களது கருவிகளை திறப்பதற்கான கட்டணங்களை அறவிடுதல் அனுமதிக்கப்பட மாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் வயர்லெஸ் நடத்தை விதி தொகுதி கோட்பாட்டின் வரவிருக்கும் மாற்றங்களின் கீழ் இத்த டை வருகின்றதென அறியப்படுகின்றது.

டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து புதிதாக வாங்கப்படும் செல்போன்கள் கட்டாயம் திறக்கப்பட வேண்டும் என இப்புதிய கோட்பாட்டை வெளியிட்ட     கனடிய றேடியோ தொலைக்காட்சி மற்றும் தொலை தொடர்பு கமிசன் தெரிவிக்கின்றது.

திருப்ப படும் சாதனங்கள் புதிய நிலையிலும் அவர்களின் மாதாந்த பாவனை காலத்தின் அரை பகுதி நாட்களிற்கு மேல் உபயோகிக்க படாமலும் இருக்கும் பட்சத்தில் திருப்தி அற்ற வாடிக்கையாளர்கள் தங்கள் ஒப்பந்தங்களை 15-நாட்களிற்குள் ரத்து செய்யலாம் எனவும் தொலை தொடர்பு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

குடும்ப அல்லது பகிரப்பட்ட திட்டங்கள் வைத்திருப்பவர் அதிகப்படியான மற்றும் ரோமிங் ஒப்புதல் பெறுவர் தவிர மற்றவர்கள் வெளிப்படையாக செலவுகளை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அறியப்படுகின்றது.

ஒரு பகிர்வு திட்டத்தில் எத்தனை தரவு சேகரிப்புக்கள் பட்டியலிடப்பட்டிருந்தாலும் கூட அனைத்தும் தனி கணக்கில் அடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சில செல்போன் கம்பனிகள் விதி முறைகளை ஒன்றில் செயலற்ற முறையில் அல்லது தீவிரமாக மீறுவதாக நுகர்வோர் குழுக்களிடமிருந்து கேள்விப்பட்ட ஆறு மாதங்களின் பின்னர் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply