கனடாவில் 15 வயது வாலிப நண்பர்கள் ஜாலி பயணத்தினால் இருவர் கொல்லப்பட்டனர்

கனடா-கியுபெக்கில் 15-வயது வாலிபன் நண்பர்கள் சிலருடன் வாகனத்தில் ஜாலி பயணத்தை மேற்கொண்ட போது சக்கரத்தின் கட்டுப்பாட்டை மீறியதால் இரு வாலிபர்கள் கொல்லப்பட்டதுடன் இருவருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கியுபெக்கில் ஜொலெட்டி என்ற இடத்தில் Thanksgiving தினமான திங்கள்கிழமை அதிகாலை 2மணியளவில் இக்கோர சம்பவம் நடந்துள்ளது. மரமொன்றுடன் மோதி சிதைந்து போன வொக்ஸ்வாகன் ஜெட்டா வாகனத்திற்கு அகப்பட்டு கொண்ட வாலிபர்களை வெளியே எடுக்க தீயணைப்பு பிரிவினர் வாகனத்தை வெட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

வேகம் விபத்திற்கு காரணமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

17-வயது மற்றும் 14-வயதுடைய வாலிபர்கள் இருவர் கொல்லப்பட்டனர். மற்ற இருவர்கள் 13மற்றும் 16வயதுடைய வாலிபர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

15-வயதுடைய சாரதி சிறு காயங்களுடன் அலட்சியம் காரணமாக ஆபத்தான டிரைவிங்கினால் மரணத்திற்கு வழிவகுத்த குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளான்.

வாலிபர்கள் அனைவரும் மொன்றியல் வடகிழக்கு பகுதியான லாவல்ட்ரி என்ற இடத்தை சேர்ந்தவர்கள்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply