கனடா அமெரிக்காவுக்கு ஸ்கொட்லாந்து பொருளாதார அமைச்சர் விஜயம்

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையில் சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ஸ்கொட்லாந்துப் பொருளாதார அமைச்சர் கீத் பிரவுன் அந்நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளார்.

இந்நிலையில் ஓட்டோவா, ரொறன்டோ, நியூ ஜெர்ஸி, நியூயோர்க் ஆகிய பகுதிகளிலுள்ள வர்த்தக சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும் ஸ்கொட்லாந்துப் பொருளாதார அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

வட அமெரிக்காவானது பொருளாதார வளர்ச்சியில் பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டுடன் இணைந்து ஸ்கொட்லாந்தில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் இதற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் ஆராயவுள்ளதாக ஸ்கொட்லாந்துப் பொருளாதார அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், திறந்த வர்த்தக நடவடிக்கைக்கு ஸ்கொட்லாந்து தயாராகவுள்ள நிலையில், அங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என்று வர்த்தக சமூகத்தினருக்கு தான் அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply