கனடிய மண்ணில் செந்தில் குமரனின் ‘மின்னலிசை’- ஓர் புரட்சி!

இசைத்துறையில் ஏற்பட்டுள்ள அதீத தொழில்நுட்ப வளர்ச்சி பாடல்களினை பலபரிமாணங்களில் மாற்றும் முயற்சியிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. இவ்வளர்ச்சியைப் பயன்படுத்தி கனடா நாட்டில் நன்கு அறிமுகமான மெல்லிசைப் பாடகரும், மின்னல் இசை நிகழ்ச்சிப் படைப்பாளருமான செந்தில் குமரன் அவர்கள் ‘மின்னலிசை’ எனும் ஒரு புதிய உத்தியை வடிவமைப்புச் செய்துள்ளார்.

minnal-nusic-290416-seithy (21)

தமிழிலும் பிற மொழிகளிலும் பிரபலமடைந்துள்ள சில திரைப்படப் பாடல்களை தெரிவு செய்து அவற்றின் இனிமை மாறாத வகையில் சிறிதளவு மாற்றங்களைச் செய்து அவற்றிற்கு மேலும் சுவையும் சுருதியும் ஊட்டி ‘மின்னல் மெல்லிசை அலைவரிசை’ என்ற YouTube இல் வெளியிடுதலே இதன் நோக்கமாகும்.

ஏ.ஆர். இரகுமானுடன் நெருங்கிப் பணியாற்றியவரான பிரவின் மணி பாடல்களின் இசையை மாற்றி அமைக்கும் பணியை மேற்கொண்டார். அதேவேளை ஷிரன் மேதர் படப்பிடிப்பை நெறிப்படுத்திப் படத்தொகுப்பையும் செய்துள்ளார்.

minnal-nusic-290416-seithy (8)

மின்னலிசையில் வரும் முதல் 10 பாடல்களும் Phase One Studio படப்பிடிப்பு மனையில் படமெடுக்கப்பட்டன. பாடல்களின் கருப்பொருளுக்கு ஏற்றவாறு அப்படப்பிடிப்பு மனையை செந்திலும் ஷிரனும் மீள் அலங்காரம் செய்துள்ளனர்.

திரு நேரு யோகநாதன் (கமெரா) அவர்களுடன் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒலியமைப்புப் பொறியியலாளர்கள் ரொறொன்ரோவிலுள்ள மிகச்சிறந்த இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் என 45 பேர் இத்தயாரிப்பில் பங்குபற்றியுள்ளனர்.

முதற்பாடலான ‘கூடமேலே கூடவச்சு’ என்ற பாடல் ஏப்பிரல் 23இல் YouTube இல் வெளியிடப்பட்டது. இப்பாடலுக்கு உலகளாவிய ரீதியில் பெரு வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.

அடுத்த ஒன்பது பாடல்களும் ஒவ்வொன்றாக இரு வார இடைவெளியில் இவர்களால் வெளியிடப்படவுள்ளன. இசைப் பிரியர்கள் YouTube இல் ‘மின்னல் மெல்லிசை அலைவரிசையில்’ (Minnal Music Channel) இலவசமாக இணைந்து புதிய தகவல்களைப் பெறுவதோடு விரைவில் பதிவேற்றம் செய்யப்படவுள்ள புதுப்படைப்புக்களைக் கண்டும் கேட்டும் மகிழலாம்.

கனேடியத் தமிழராகிய நாம் எம்மிடையே உள்ள கலைஞர்களை குறிப்பாக தாயக மக்களின் நலனுக்காக அயராது உழைப்பவர்களை ஊக்குவித்து அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும்.

செந்தில் குமரனுக்கும் மின்னல் இசைக் குழுவிற்கும் எம் பாராட்டுக்கள்! அவர்களின் இசைப் பயணம் மென்மேலும் வளர்ந்தோங்க நம் நல் வாழ்த்துக்கள்!

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply