கப்பம் பெற முயற்சித்த மூன்று பேர் கைது

கப்பம் பெற் முயற்சித்த நபர் ஒருவர் கொட்டாவ, மாகும்புர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், மாகும்புர பிரதேசத்தில் தொலைபேசி மூலம் மிரட்டி நபர் ஒருவரிடம் கப்பம் பெற முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பன்னிப்பிட்டிய, பொரள்ளை வீதி பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தவிர குருணாகல் பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திச் சென்று 3 இலட்சத்து 80,000 ரூபா கப்பம் பெற முயற்சித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொல்பிட்டிகம பிரதேசத்தில் வசிக்கும் 27 மற்றும் 28 வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply