கள் முட்டி

61-273x300யாழ்ப்பாணத்தில் பனை, தென்னையிலிருந்து கள் எடுக்கப்படுகிறது. அதிலும் பனங்கள்ளிற்கு தனி மரியாதை உண்டு. கள் என்றால் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது கூவில் கள் தான். இங்குள்ள கள் ஏனைய இடங்களை விட மிகவும் இனிமையானது. உடனடியாக எடுக்கப்பட்ட கள்ளில் பெருமளவு சத்துக்கள் உள்ளபடியால் ஆரோக்கியத்திற்கு உகந்தது. அத்துடன் உடலிற்கு குளிர்மையுமானது. எமது மூத்தவர்கள் இந்த இயற்கையான பானத்தையே தமது வெம்மையை போக்க பாவித்தனர். முன்னர் தோசை, அப்பத்திற்குரிய மாவைப் புளிக்க வைக்கவும் கள்ளைப் பாவித்தனர். இப்படித் தயாரிக்கப்படும் உணவிற்கு தனிச் சுவையும் இருக்கும்.
பனையில் பாளையை பதப்படுத்தி மண்ணால் செய்யப்பட்ட முட்டிகளை கட்டி கள்ளைச் சேமிப்பார்கள். இப்பானைகளின் உள்ளே சுண்ணாம்பை தடவி பதநீரை தயாரிப்பார்கள். இப்பதநீரில் இருந்து பனங்கட்டி தயாரிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல கூழ் காய்ச்சவும் பயன்படுகிறது. இயற்கைப் படைப்பில் ஒரு போசாக்கான பானமாக கள் இருக்கிறது. இது யாழிற்கு பெருமைதானே.

நன்றி – தகவல் மூலம் – http://www.ourjaffna.com இணையம்

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply