காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியை பிரத்தியேகமாக சந்திக்க வேண்டும் என விடுத்தக் கோரிக்கைக்கு அமைய, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மேலும், இதன்போது ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியிடம் தங்களின் பிள்ளைகள் இரகசிய முகாம்களில் இன்னும் இருப்பதாக கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, சிறப்பு வாகன ஏற்பாடும் பொலிஸ் பாதுகாப்பும் வழங்குகிறேன் நீங்கள் (காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்) எங்கு இரகசிய முகாம் இருக்கிறதோ அங்கு சென்று பார்வையிடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply